மரமும் கல்லும் பேசுமா?

அல்லாவும் உலகவியலும் பாகம் -11.

இஸ்லாத்தின்படி மரமும் , கல்லும் பேசவும் செய்யும்..

முஸ்லிம்:- 770.
அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப்பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

இங்கு, மரம் பேசுவதோடுமட்டுமல்லாமல், ஜின்களைப்பற்றி முஹம்மதிடம் உளவுப் பணியையும் செய்திருக்கின்றன.

 முஹம்மதின் பிரிவைத் தாங்கமுடியாமல் வெட்டப்பட்ட பேரிச்சமரத்தின் அடிமரக்கட்டை அழுகிறது. அது ஓலமிட்டதை அவர்களது தோழர்களும் கேட்டிருக்கின்றனர்.

புஹாரி:- 918.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உரையாற்றும் போது) நின்றுகொள்வதற்காக (ஆரம்பத்தில்) பேரீச்சமரத்தின் கட்டை ஒன்றிருந்தது. நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவுமேடை செய்து வைக்கப்பட்டபோது அந்தக்கட்டையிலிருந்து சூல்கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியேற்றோம். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (மிம்பரிலிருந்து) இறங்கி (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தமது கையை வைத்தார்கள். (அதுவரையில் அந்தச் சப்தம் வந்து கொண்டேயிருந்தது.)

முஹம்மது வந்து கைவைத்து சமாதானம் செய்யும்வரை ஓலமிட்டுள்ளது.

 இதைத்தான் அல்லாஹ், சிந்திக்கமாட்டீர்களா, சிந்திக்கமாட்டீர்களா  என்று பலமுறை கெஞ்சாதகுறையாக கேட்கிறான்.

இது இந்த மடையர்களுக்கு எங்கே புரியப்போகிறது?

இதாவது பரவாயில்லை.

உயிரற்ற, ஒரு கல் முஹம்மதிற்கு “அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)” என்று கூறி வந்துள்ளது. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

முஸ்லிம்:- 4574.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லிவந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.

                என்ன அறிவுகெட்டத்தனமாக இருக்கிறது. கல் எங்காவது பேசுமா? என்று நினைத்தாலே உங்களது ஈமாந்தாரித்தனம் போயே போயிந்தி..

இஸ்லாம் மதமல்ல மார்க்கம்.
அதுவும் இது பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம்.

                 அஸ்வத்தை வெறும் கல் என்று உளறினாலும், போனால் போகிறதென்று ஒரு முத்தமிட்டு சமாளித்து, முஹம்மதின் மரபைக் காப்பாறிவிட்டார் உமர்.

இன்றும் கூட வாழையடி வாழையாக முமீனுகளால் இந்த மரபு தொடர்கிறது.

அது வெறும் கல்தான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

எங்களுக்கா பகுத்தறிவில்லை? என்று கேட்டவாறே கல்லை முத்தமிடுகின்றேன் என்று பாய்கின்ற முஸ்லிம்கள் முத்தமிட்டு முடித்துதான் வெளியில் வருகின்றனர்.

 நெரிசலில் சிக்கி, பிதுங்கி,
நையப்பாடு பட்டு ஹஜ் முடிச்சு..
ஊருக்கு வந்து இங்கே...
அவன் கல்லை வணங்குகிறான், இவன் கட்டையை வணங்குகிறான் என்று மற்றவர்களை ஏளனம் செய்வதை மட்டும் கைவிடுவதாகயில்லை.

ஏனெனில் இஸ்லாம் மதமல்ல மார்க்கம்.

பகுத்தறிவு மார்க்கம்!!.

No comments:

Post a Comment