அல்லாவும் உலகவியலும் -23.
குர்ஆன்ல இருக்கும் ஒரே அறிவியல் சேதி..
அல்லா மர்யமிடம் ஊதவைத்து அதனால் பிறந்த குழந்தை இயேசு(ஈசா நபி)..
21:91. இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும்,
நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) #நம்_ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) #ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இதைப்பற்றிய ஒரு மொத்த கதைகூட இருக்குது..
19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பிவைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
(ஜிப்ரீல் மர்யமுக்கு மஹ்ரமான உறவா?.. மஹ்ரமற்ற உறவா?..
ஜிப்ரீல் ஆணா?.. பெண்ணா?..)
19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
19:19. “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
19:20. அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
(★ ஆடவன் தீண்டுறது சரி.. அதென்ன நடத்தை பிசகுதல்?.. ஆடவன் தீண்டாம நடத்தை பிசகி பிள்ளை பெத்துக்குவது எப்படி??.. இதைபற்றி ஆராய ஆரம்பிச்சால் குர்ஆன்ல அறிவியல் இல்லைன்னு ஆகிடும்.. ஆனால் பதிவோட நோக்கம் குர்ஆன்ல அறிவியல் முன்னறிவிப்பு இருக்குன்னு நிலைநாட்டுவதுதானே.. அதனால் இதனை கடந்துவிடுவோம்.)
19:21. “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
ஆச்சா...
இப்போ குர்ஆன்ல இருக்கும் அறிவியலை பார்ப்போம்..
21:91 , 66:12 வசனங்கள் மர்யம் கற்போடு இருந்ததாக உறுதியாக சொல்கிறது...
19:20 வது வசனத்தில் மர்யம் ஆண் தன்னை தீண்டாமல் எப்படி பிள்ளை பிறக்கும்னு கேட்கிறார்..
19:21 ல ஜிப்ரீல் அது ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொல்றாப்டி...
19:22 ல மர்யம் இயேசு (ஈசா)வை கருக்கொண்டதாக கதை போகுது..
ஆச்சா....
இந்த விலாசத்துல நவீன அறிவியல் சேதி ஒன்னு இருக்குது... படிச்சிடுங்க..
பார்க்க
ஆச்சா...
குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேணும்?...
குர்ஆன் அறிவியலில் புல்லரிப்போர் மேற்கொண்டு படிக்காதீர்கள்...
்........்.......்....்
சொல்பேச்சு கேட்காமல் வந்திட்டீங்களா.... சரிவாங்க....
மேலுள்ள குர்ஆன் கதையில்... எங்கயோ ஓட்டை இருக்குறமாதிரி தெரியுதா காபிர்களே....
அதேதான்.....
மர்யம் கர்ப்பமானது சரி... அந்த புள்ளைக்கு காரணம் யாரு...??? புள்ளைக்கு பொறுப்பேற்கும் அப்பா யாரு?.???
நவீன அறிவியல்படி...
ஆணுக்கோ பெண்ணுக்கோ உடலியல் குறை இருக்கும் நிலையில் (சிலநேரம் கருமுட்டை மட்டும் தானம் பெற்று குறிப்பிட்ட குழந்தை வேண்டும் பெண்ணுக்கே கருவாக்கும் செயல்களும் உண்டு.) இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாகக் கருவாக்கல் நிகழ்த்தப்படும். ஆணின் விந்தின் தரம் குறைபாடுள்ளதாக இருப்பின், விந்தை நேரடியாக முட்டையினுள் செலுத்துவர். இது விந்து ஊசிமூலம் ஏற்றும் முறை (intracytoplasmic sperm injection - ICSI) எனப்படுகிறது.
நல்ல கருமுட்டை, கருவாக்கும் திறன் கொண்ட விந்து, மேலும் கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக்கூடிய கருப்பை என்பன இதற்கு முக்கிய தேவைகள். இந்த முறைக்கான செலவு கூடுதலாக இருப்பதால் வேறு செலவு குறைந்த மற்ற மருத்துவ முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும்.
இம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருவாக்கலின் பின்னர் கருவைத் தாங்கிக் கருத்தரிப்புக்கு உட்படும் பெண்ணும் வெவ்வேறு நபராக இருப்பர்.
குழந்தை வேண்டும் பெண்ணிடமிருந்து நல்ல தரமான முட்டைகளைப்பெற முடியாதெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெற்று கருவாக்கலுக்குப் பின்னர் குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பையில் உள்வைத்து பதிக்கிறார்கள்.
குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை இல்லாமல் இருந்தால் அப்பெண்ணின் முட்டை கருக்கடிய பின்னர் வேறொரு பெண்ணின் கருப்பையில் பதிப்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் குழந்தை வேண்டிய பெண்ணிடம் குழந்தையைத் தருவார்கள்.
குழந்தை வேண்டும் ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளையில் வேறொரு ஆணிடம் விந்தணு தானம் பெற்று கருவாக்குகிறார்கள்.
ஆச்சா.... சரி.. இப்போ விசயத்துக்கு போவோம்...
மர்யம் கற்போடு உள்ள பொண்ணு... அதனால்... நிச்சயமாக வெளியில் இருந்து ஏதோ நடந்திருக்குது.. ஒருவேளை கருமுட்டை, விந்தணு வெளியில் இருந்து பெறப்பட்டு கருவாக்கப்பட்டு மர்யமோட கருப்பையில் வைக்கப்பட்டிருக்கலாம்...
இல்லை கருமுட்டை மர்யமோடதுதான் என்றாலும்... பெரிய பஞ்சாயத்து இல்லை...
ஆனால்..... அந்த குறிப்பிட்ட விந்தணு யாரோடது...????
அல்லாவோடதா?...!????
கீழுள்ள வசனங்களைப்படிச்சு... தெளிவு பெறுங்கள்....
2:87. ... .... இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; ... ....
2:253. .... ... மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; .... ....
16:102. .... .... உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.
இது அல்லா ஆதமுக்கு ஊதினது..
15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
38:72. “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);
இது அல்லா ஒட்டுமொத்த மனித குலத்துக்கே ஊதினது...
32:7. அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
(★ அல்லா தான் படைச்ச ஒவ்வொரு பொருளையும் அழகா ஆக்கியிருக்காப்டியாம்ல... )
32:8. பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
32:9. பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.
ரொம்ப குழப்பமா இருக்குதா???!!!
இன்னும் இரிக்கி...
78:38. ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் ... ....
26:193. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
அல்லா லூசா... இல்லாட்டி இதையெல்லாம் உண்மைன்னு நம்பி மாத்தி மாத்தி குண்டுபோட்டு விளாடுற முல்லாக்கள் லூசான்னு சந்தேகம் வருதா?.??
நிச்சயமா முல்லாக்கள்தான் லூசு....
ஏன்னா... குர்ஆன்ல இரிக்கின்னு புல்லரிக்கும் முமீனுகள்... இந்த வசனத்தையும் படிக்கத்தான் செய்றாக....
2:253. ..... .... அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment