அல்லாவும் உலகவியலும் பாகம் - 16.
குர்ஆனை விளக்க அல்லாவால் முடியாது.
முல்லாக்களின் உதவி அவசியம். இது எல்லாருக்கும் தெரிஞ்ச பொதுக்கருத்து..
ஆனால் குர்ஆன் அதை ஒப்புக்காது...
ஏனெனில்.....
குர்ஆன் விளக்கப்பட்டது.. தெளிவாக்கப்பட்டதுன்னு.. தனக்குத்தானே புல்லரித்துக்கொள்கிறது.
அதை முல்லாக்களே ஏற்பதில்லை.. பிரா(ஜா)க்கெட் மாட்டிவிட்டுருவாங்கே.....
கொஞ்சம் குர்ஆன் வசனம் பார்ப்போம்....
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
2:221...
மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
2:242. நீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகிறான்.
2:266
....
நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:176.
....
நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
7:174. அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
இதெல்லாம் சாம்பிள்...
இன்னும் நிறைய இருக்குது..
சரி... நாம விசயத்துக்கு போவோம்...
புஹாரி ஹதீஸ்:-
4589. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) 4:88 வது இறைவசனம் குறித்துக் கூறினார்
(உஹுதுப் போருக்காக) நபி(ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்துவிட்டார்கள். இவர்களின் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபட்டு) மக்கள் இரண்டு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்' எனும் (திருக்குர்ஆன் 04:88 வது) இறைவசனம் அருளப்பட்டது.
மேலும், நபி(ஸல்) அவர்கள், 'மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப்போல் அது தீமையை அகற்றிவிடும்' என்று கூறினார்கள். 20
அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதனை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணும் ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:82 வது வசனத் தொடர்).
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அஃதாஊ' எனும் சொல்லுக்குப் 'பரப்பிவிடுவார்கள்' என்று பொருள். 'யஸ்தன்பித்தூன்' எனும் சொல்லுக்கு 'ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 04:86 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹசீப்' எனும் சொல்லுக்குப் 'போதுமானவன்' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 04: 117 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இனாஸ்' எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். 'மரீத்' எனும் சொல்லுக்கு '(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 04:119 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபல்யுபத்திகுன்ன' எனும் சொல்லுக்கு 'அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 04:122 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கீல்' எனும் பதமும் 'கவ்ல்' எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(திருக்குர்ஆன் 04:155 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'தபஅ' எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) 'துபிஅ' எனும் சொல்லுக்கு 'முத்திரையிடப்பட்டது' என்று பொருள்.
Volume :5 Book :65
4772. முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரணவேளை வந்துவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், 'அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா இப்னி முஃகீரா'வையும் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'என் பெரிய தந்தையே! 'லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை)' என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்' என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் 'அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, 'நான் (என் தந்தை) அப்துல் முத்தலிப் மார்க்கத்தில் இருக்கிறேன்' என்பதாகவே இருந்தது. 'லாஇலாஹா இல்லல்லாஹ்' எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்' என்று கூறினார்கள். அப்போதுதான், 'இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை' எனும் (திருக்குர்ஆன் 09:113 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூ தாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் '(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்' எனும் (திருக்குர்ஆன் 28:56 வது) வசனத்தை அருளினான்.
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:
(திருக்குர்ஆன் 28:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உலில் குவ்வத்தி' (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால் கூட சுமக்கமுடியாது. 'லதனூஉ' எனும் சொல்லுக்குச் 'சிரமமாக மாறும்' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 28:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபாரிஃகா' எனும் சொல்லுக்கு '(மூஸாவுடைய தாயாரின் உள்ளம்) மூஸாவின் நினைவைத்தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 28:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபரிஹீன்' எனும் சொல்லுக்கு 'ஆணவம் கொண்டோர்' என்று பொருள். (இச்சொல்லுக்குப் 'பூரிப்படைவோர்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(திருக்குர்ஆன் 28:11 வது வசனத்திலுள்ள) 'அவரை நீ பின்தொடர்ந்து செல்' எனும் பொருள் மூலத்திலுள்ள 'குஸ்ஸீஹி' எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் 'சம்பவத்தை எடுத்துரைத்தல்' எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'அன் ஜுனுபின்' எனும் சொல்லுக்கு 'தூரத்திலிருந்து' என்று பொருள். (இச்சொல்லும்) 'அன் ஜனாபத்தின்' எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. 'அன் இஜ்தினாப்' எனும் சொல்லும் அவ்வாறே!
(திருக்குர்ஆன் 28:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யப்திஷ்' (தாக்க) எனும் சொல் 'யப்துஷ்' என்றும் வாசிக்கப்பட்டுள்ளது.
(திருக்குர்ஆன் 28:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஃதமிரூன்' எனும் சொல்லுக்கு 'ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர்' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 28:28 வது வசனத்தின் மூலத்திலள்ள) 'அல்உத்வான்' எனும் சொல்லும், 'அல் அதாஉ' எனும் சொல்லும், 'அத்தஅத்தீ' எனும் சொல்லும் ('வரம்பு மீறல்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(திருக்குர்ஆன் 28:29 வது வசனத்திலுள்ள) 'கண்டார்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'ஆனஸ' எனும் சொல்லுக்குரியதாகும்.
(திருக்குர்ஆன் 28:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஜஃத்வா' எனும் சொல்லுக்குத் 'தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி' என்று பொருள். (திருக்குர்ஆன் 27:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஷ்யுஹாப்' எனும் சொல்லுக்குத் 'தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி' என்று பொருள்.
(திருக்குர்ஆன் 28:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜான்' எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். 'அஃபாஈ' (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் 'அசாவித்' (கருநாகம்) ஆகியவற்றையும் (திருக்குர்ஆன் 20:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹய்யத்' (பாம்பு) எனும் சொல் குறிக்கும்.
(திருக்குர்ஆன் 28:34 வது வசனத்திலுள்ள) 'உதவியாளர்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'ரித்ஃ' எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ்(ரலி) 'யுஸத்திக்குனீ' (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (மற்ற சிலர் 'யுஸத்திக்னீ' என்று ஓதியுள்ளார்கள்.)
இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்:
(திருக்குர்ஆன் 28:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸ நஷுத்து' எனும் சொல்லுக்கு, 'உமக்கு நாம் உதவி புரிவோம்' என்று பொருள். ('ஸநஷுத்து அளுதக்க' என்பதற்கு உம்முடைய கரத்தை நாம் வலுப்படுத்துவோம்' என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்காக கரமாக ஆகிறாய்! (அதனால், இங்கு 'கரம்' அல்லது 'கொடுங்கை' ('அளுத்') எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.)
Volume :5 Book :65
இப்பிடி விளக்கி வச்சிருக்கானுகளே முல்லாக்கள் இது சரியான்னு சந்தேகம் வருதுதானே உங்களுக்கு.
சந்தேகம் வேண்டாம்.
அல்லாவே வாக்குமூலம் கொடுக்குறாப்டி..
குர்ஆன்ல விளக்கமான வசனம் மட்டுந்தான் இஸ்லாத்துக்கு அடிப்படை. மற்றவற்றை நம்பினா போதும்.
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
சிரிக்காதீங்க மக்களே.. இன்னும் இருக்குது.
இப்போ பிரா(ஜா)க்கெட் வசனம் ஒன்னை பார்ப்போம்..
17:41. இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.
இப்போ இதில் பிரா(ஜா)க்கெட்டை கழட்டிட்டு பார்ப்போம்...
17:41. இன்னும் அவர்கள் படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், அவர்களுக்கு வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.
ஏன் அப்படியாம்...????
இதோ.....
18:54. இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
பாவம் அல்லா.... மனிதன் தர்க்கம் பண்ணுறதை நெனைச்சு ரொம்பவே ஃபீல் ஆயிட்டாப்டி.....
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment