அல்லாவும் உலகவியலும் பாகம் - 15.
பாடம் : 68 அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உண்டு.87
6410. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 80
முகமதுவிற்கு ஒற்றைப்படையென்றால் மிகவும் விருப்பம்.
1) மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவேண்டுமாம். முஹம்மது தொழும் போது ஒற்றைப்படையில் ரக்அத்களை சொல்லி தொழுவாராம்.
2) ரமளான் மாதத்தில் நோன்பை முடிக்கும் போது ஒற்றைப்பட எண்ணில் பேரீச்ச பழங்களை சாப்பிடுவாராம்.
3) மரித்தவர்களை குளிப்பாட்டும் போது, 1, 3, 5 அல்லது 7 என்ற ஒற்றைப்பட எண்களில் குளிப்பாட்ட வேண்டுமாம்.
4) இதுமாத்திரமல்ல, அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
இப்படியெல்லாம் சொல்பவர் ஒரு உண்மை தீர்க்கதரிசியாம்.
ஸஹீஹ் புகாரி எண்கள்: 161, 162, 823, 953, 1254, 1263.& 6410
161. 'உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4
162. 'உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தாhல் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4
823. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள். Volume :1 Book :10
953. அனஸ்(ரலி) அறிவித்தார்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. Volume :1 Book :13
பாடம் : 9 ஒற்றைப் படையாகத் தண்ணீர் ஊற்றி நீராட்டுவது விரும்பத் தக்கது.
1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்' என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார்.
Book : 23
பாடம் : 17 பெண் சடலத்தின் முடி அதன் பின்புறம் தொங்கவிடப்படுதல்.
1263. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகள்களில் ஒருவர் மரணமாகிவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'மய்யித்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்ற அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாகக் குளிப்பாட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாடடி முடிந்து தெரிவித்ததும் தம் கீழாடையை (மய்யித்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம்.
Book : 23
இது நம்ம TNTJ கிளிக்கூட்டத்தோட ஸ்டேட்மன்ட்..
http://www.tntjthiruvarur.com/2014/07/blog-post_8740.html?m=1
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment