மறுமையில் பரிந்துரை உண்டா?? இல்லையா??

அல்லாவும் உலகவியலும் -50.

குர்ஆன் முரண்பாடு இல்லாத கிதாப்பா???

மறுமைநாள் பரிந்துரை காமடிகள்...

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

...ஆஹான்...

1)
டிசைன் -A
பரிந்துரைக்கு வாய்ப்பேயில்லை..

2:48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.

2)
டிசைன் - B
அல்லாஹ் அனுமதித்தால் மலக்குகள் (வானவர்கள், உதாரணமாக ஜிப்ரீல்) பரிந்துரை செய்ய முடியும்..

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; .. .. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? .. ..

10:3. நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; ... ... அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. ... ...

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.

34:23. அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது; ... ...

53:26. அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.

அதாவது அல்லாவுக்கு பிடிச்ச ஆட்கள் மட்டும் பரிந்துரை செய்யலாம்..

சரி.. இந்த மலக்குகள் யாருக்கு பரிந்து பேசுவார்கள்??

21:28. ... ...
இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். ... ...

அதாவது அல்லாவுக்கு யாரை பிடிக்குமோ... அவர்களுக்குதான் மலக்குகள் பரிந்து பேசுவாய்ங்களாம்...

3)
டிசைன் - C
அல்லாஹ்வைத்தவிர யாராலும் பரிந்துபேச முடியாது..

6:51. ... ...
அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.

6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, ... ..
 அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; ... ...

39:44. “பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது;

32:4. அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?

எல்லாஞ்சரி..

6:51, 6:70, 32:4, 39:44 ஆகிய வசனங்கள்.. அல்லா பரிந்துரைப்பதாக சொல்லுதே..

அல்லாதான் பெரிய அப்பாடக்கர்னா... அல்லா யார்கிட்ட பரிந்துரைக்கனும்??

கட்டளையிட்டாலே... வேலை செய்ய மலக்குகள் இருக்கும் இடத்தில்.. அல்லா யாரிடம் பரிந்துரை செய்வாப்டி?..

ஒருவருக்காக பரிந்துரையையும் அல்லாவே எழுதி.. அல்லாவே படிச்சு... அல்லாவே அதை அக்சப்ட் பண்ணி... கையெழுத்தும் போட்டு கொடுப்பாப்டி போல...

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...