முஸ்லிம்கள் எந்த கோவிலையும் இடிக்கலை... நம்புங்க..
ஏன்னா... முஸ்லிம்கள் பொய் சொல்வதில்லை.. குறிப்பாக... TNTJ ஆட்கள் வாயைத்திறந்தா.. உண்மையை மட்டுந்தான் பேசுவாங்க...
அப்படித்தானா...
நீங்க எந்த கோவிலையும் இடிக்கலை... கீழேவரும் அத்தனை ஹதீஸும் பொய்யுன்னே வச்சுக்குவோம்...
அந்த ராணி யாரு?? பேரு என்னவென எப்படா சொல்வீங்க??..
ஒட்டுமொத்த மகாராணிகளும் சாமி கும்பிட போனப்போ.. எப்படிடா ஒரு ராணி மட்டும் தனியே காணாம போனாக..??
மாகாராணிக்கு உள்ள பணிப்பெண், மெய்காப்பாளர்கள்லாம் எங்கே போனாக??
ஔரங்கசீப் ஆட்சியில் ஒரு மகாராணி கடத்தப்படும் அளவுக்கு பாதுகாப்பு கேவலமாதான் இருந்திச்சுன்னு வாக்குமூலம் கொடுக்குறானுக...
அதாச்சும் பரவாயில்லை...
கருவறைல இருக்கிற சிலை ஆள் அசைச்சா அசையுதா???
அதுக்கு கீழே படி போகுதா??.. சரி... அந்த படி எங்கடா போச்சு???..
சரி அத்தோடு போனாலும் பரவாயில்லை.. காசியில் உள்ள முக்கிய கோவில்ல கணபதி சிலையா?... காசிக்கு விஸ்வநாதர் உட்பட காசிநாதர்தானடா முக்கிய சாமியே...
அதும் பரவாயில்ல...
சரி... தண்டிக்கப்பட்டவனுக யாரு??? அவிக பேரையாச்சும் சொல்வீகளா???
அல்லது அதுக்கும் பெப்பே-தானா???
அதாச்சும் பரவாயில்லை.. கட்சு சமஸ்தான ராணியை காணாம்னு விட்டீங்க பாருங்கடா ஒரு ரீலு... அடேய்களா... 13வது நூற்றாண்டுல இருந்து.. அவிக ஆங்கிலேயே ஆட்சி காலத்துலயும் பதவியில இருந்திக்காய்ங்கடா..
இது எல்லாத்தையும் கூட விட்டுடுறேன்டா... ஔரங்க'சீப்பு' எதுக்காக டெல்லில இருந்து வங்காளத்துக்கு போனாப்டின்னு சொல்லுங்கடா...
அதுங்கூட வேணாம்....
எந்த வருசம் நடந்த சம்பவம் இதுன்னு மட்டுமாச்சும் சொல்லுங்கடா....
இனி உங்க ஹதீஸ்களை கொஞ்சம் பார்ப்போம்...
புஹாரி ஹதீஸ்:-
2478. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது' (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.
Volume :2 Book :46
4287. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி(ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. சத்தியம் வந்துவிட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிடிக்காது' என்று கூறிக்கொண்டே, தம் கையிலிருந்து குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.
Volume :4 Book :64
4720. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இறையில்லம் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருந்த நிலையில், நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். தம் கரத்திலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தியபடி, 'சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதே!' என்றும் 'உண்மை வந்துவிட்டது; அசத்தியம் புதிதாக ஒன்றையும் செய்துவிடவுமில்லை; (இனி) அது மீண்டும் ஒருமுறை பிறக்கப்போவதுமில்லை' என்றும் கூறலானார்கள்.
Volume :5 Book :65
3020. ஜரீர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்;
.....
.....
எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
Volume :3 Book :56
3076. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'துல் கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்படடு வந்த ஆலயமாக இருந்தது. நான் 'அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது (குதிரை) வீரர்களுடன் புறப்பட்டோம்.
...
...
நான் அதை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். நபி(ஸல்) அவர்களுக்கு அதை (உடைத்து எரித்துவிட்டது) பற்றிய நற்செய்தி தெரிவிக்கச் சொல்லி ஆளனுப்பினேன். என்னுடைய தூதுவர், 'இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) 'அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படையினருக்கும் பரக்கத் (எனும் அருள் வளத்)தை அளிக்கும்படி பலமுறை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
Volume :3 Book :56
4356. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'துல் கலஸாவி(ன் காலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது 'கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது 'யமன்' நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் 'அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன்.
...
...
உடனே, நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், 'தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தை சிரங்கு படித்த ஒட்டகம் போன்ற நிலயில்விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(இறைவா!) 'அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!' என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.
Volume :4 Book :64
4357. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.
'துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், 'சரி (விடுவிக்கிறேன்)' என்று சொன்னேன். அவ்வாறே, 'அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன்.
...
...
'துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த 'கஸ்அம்' மற்றும் 'பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது 'அல்கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விடேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக குறிகேட்கிற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இங்கே (அருகில் தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக் கெண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்' என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். பிறகு 'அஹ்மஸ்' குலத்தவரில் 'அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, 'நபி(ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, 'இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றே (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்' என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) 'அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.
Volume :4 Book :64
6333. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடம், 'துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார்கள். துல்கலஸா என்பது, (அறியாமைக் காலத்திலிருந்து) ஒரு பலிபீடமாகும். அதனை மக்கள் வழிபட்டு வந்தனர். அது 'யமன் நாட்டு கஅபா' என அழைக்கப்பட்டுவந்தது.
...
...
இதையடுத்து என் சமுதாயத்தாரான 'அஹ்மஸ்' குலத்தாரில் ஐம்பது பேருடன் நான் (துல்கலஸா நோக்கிப்) புறப்பட்டேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினருடன் நான் நடந்தேன்' என்று சுஃப்யான்(ரஹ்) அவர்கள் சில நேரங்களில் அறிவித்தார்கள்:
பிறகு, நான் 'துல்கலஸா' சென்று அந்த பலிபீடத்தை எரித்துவிட்டேன். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தப் பலிபீடத்)தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் தங்களிடம் நான் வந்துள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், (என்) 'அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் அவர்களின் குதிரைகளுக்காகவும் (வளர்ச்சி) வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.
Volume :6 Book :80
முஸ்லிம் ஹதீஸ்:-
3650. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். மேலும் "உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது" (17:81) என்றும் "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை; இனியும் செய்யப்போவதில்லை" (34:49) என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் மக்காவினுள் நுழைந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அழியக்கூடியதாகவே உள்ளது" என்பது வரையில்தான் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது வசனம் இடம்பெறவில்லை. மேலும் (சிலைகள் என்பதைக் குறிக்க "நுஸுப்" என்பதற்குப் பகரமாக) "ஸனம்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
Book :32
4883. ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஜரீரே! துல்கலஸாவி(ன் கவலையி) லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். அது "கஸ்அம்" குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா" என்று அழைக்கப் பட்டுவந்தது.
எனவே, நான் ("அஹ்மஸ்" குலத்தைச் சேர்ந்த) நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் விரைந்தேன்.
...
...
உடனே நான் அங்கு சென்று அதைத் தீயிட்டு எரித்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக எங்களில் "அபூஅர்த்தாத்" எனப்படும் ஒரு மனிதரை அனுப்பினேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அ(ந்த ஆலயத்)தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் உங்களிடம் வந்துள்ளேன்" என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளுக்காகவும் அக்குலத்தாருக்காகவும் வளம் வேண்டி ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாவும் வந்துள்ளது.
அவற்றில் மர்வான் அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து நற்செய்தி சொல்லும் தூதுவராக அபூஅர்த்தாத் ஹுஸைன் பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னார்" என்று இடம்பெற்றுள்ளது.
Book :44
No comments:
Post a Comment