குர்ஆன்ல முரண்பாடு இல்லையா!!??

அல்லாவும் உலகவியலும் -35.

அல்லாஹ் இறக்கியதாக இருப்பதால்.....
முரண்பாடுகளே இல்லாதது குர்ஆன் (4:82)

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

ரைட்..... இனி.... குர்ஆனை தூர்வாருவோம்...

குர்ஆன் இறைவேதம்னு "நம்பனும்"... (ஆதாரம் :- 2:1,2 )

இதை கொஞ்சம் விளக்கமா பார்த்திடுவோம்..

2:1 அலிஃப், லாம், மீம், அதாவது அல்லாஹுதாலா (இந்த அல்லாஹ்தாலா - பெரிய இறைவன் வேற யாருமில்ல. பழைய சந்திரக்கடவுள் (ஹூபால்), இப்போதைய அல்லாஹ்.. 😄😉😄),  வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக் குர்-ஆனாகிய,
2:2 இது, திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும்.
அதாவது நம்ம க.கா.கே என்ன சொல்றாருன்னா... அல்லாஹ் ஜிப்ரியேலை தன்கிட்ட அனுப்பி... உலக (அரேபிய 😄) மக்களுக்கு இது, தான் கொடுக்கும் வேதம்னு முகம்மதுவை சொல்லச்சொன்னாப்டியாம்... அல்லாஹ் முகம்மதுவை நோக்கி ஆகுகன்னு சொல்லியிருந்தா வேலை சட்டுன்னு முடிஞ்சிருக்குமேன்னு காபிர்தனமாக கேட்காதீர்கள்.. அல்லாஹ்வுக்கு அன்னிக்கு தொண்டை கட்டிக்கிச்சாம்..
அதனாலதான் ஜிப்ரியேலை செட்டப் பண்ணியிருக்காப்டி.
இதுபற்றிய வஹீ எனக்கு இப்போதான் வந்திச்சு.. 😇😇)

குர்ஆன் அல்லாவே இறக்கினதுன்னு "நம்பனும்"...
 (மேலே உள்ள விளக்கம்தான் இதுக்கும்... கூடவே இன்னொரு வசனம் 41:42 ... )

குர்ஆன்-ல மெக்கா-மதீனா-மெக்கா வசனங்கள் பல இடத்தில் இடிச்சுக்கிட்டாலும்... அதெல்லாம் காலத்துக்கு ஏற்ப 23 வருசத்து வேறுபாட்டால வந்தது. ஆனால் அதெல்லாம் முரண்பாடு இல்லைன்னு "நம்பனும்"...
மெக்கா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு முன்பு) அத்தியாயம்--109; மதீனா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு பின்பு) அத்தியாயம்--09;

குகைக்குள்ள வானத்துக்கும் பூமிக்குமாக ஜிப்ரியேல் நின்னதை "நம்பனும்". வானத்துக்கும் பூமிக்குமாக நின்ன ஜிப்ரியேல் முகம்மதுவை கட்டிப்பிடிச்சதை "நம்பனும்"... அத்தியாய வசனம் 96:1... , 74:1-5

இதையும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..

ஏன்னா.. முகம்மதுங்கிற காபிர், முமீன் ஆகிய கதையையோட முதல் இடம் இதுதான்..

96:1 படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக!

ஏன்?.. எங்கே ?.. எப்படி?..

இதோ:- முகம்மது-ங்கிற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட காபிர் ( புஹாரி:- 364 )... 40 வயசுல ஜிப்ரியேல் மூன்றாம் முறையாக கட்டிப்பிடிச்சு ஓதச்சொல்ல... முகம்மது முமீன் ஆகி ஓத ஆரம்பிச்சாப்டி.. (புஹாரி:- 3, 4, 4953, 6982 மற்றும் முஸ்லிம்:- 252,253,254,255,256,257,258) அப்புறம் சிலநாட்கள் இடைவெளியில் மீண்டும் வஹீ் வர ஆரம்பிச்சது..   (74:1-5 படிச்சிட்டு புஹாரி , முஸ்லிம் ஹதீஸ் வசனங்களை படிச்சு சிரிச்சீங்கன்னா... அல்லாஹ் உங்களை நரகத்துல போட்டுருவாரு... 😛😛)

நிகரற்ற அன்புள்ள அல்லாஹ் நரகத்தை படைச்சதை "நம்பனும்"... ( 1:1 ) , ( 7:179 )
நரகத்துக்கு போறது மனிதனோட தப்புன்னு "நம்பனும்"... (4:140 , 7:8, 9 , 11:119 , 18:100)
மற்றும்.... 23: 102, 103.
[[ 103: ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.]]

அதே நேரத்தில் அல்லாஹ் நாடாமல் யாராயிருந்தாலும் தனக்குத்தானே எந்த நன்மையையோ, தீமையையோ செய்து கொள்ள முடியாதுன்னு "நம்பனும்"...
(4:78, 4:79, 5:76, 6:71, 7:188, 10:18, 10:49, 10:106, 13:16, 20:89, 21:66, 25:3, 25:55, 26:73, 34:42, 72:21)

அவரவர்க்கு அவரவர் மதம்னு சொல்வதாக "நம்பனும்"... (109:6)
பிறமதத்தவர்கிட்ட ஜிஸ்யா வசூல் பண்ண சொல்வது சரின்னும் "நம்பனும்"... (9:29)

சாராயம், விபச்சாரம் மற்றும் இன்னபிற போதை வஸ்துகள் எல்லாம் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதுன்னு "நம்பனும்"... (2:219, 5:90,91)
அதே நேரத்தில் சாராயம் காய்ச்சும் முறை பற்றியும், விபச்சாரத்தில் ஈடுபடுவது பற்றியும் அல்லாஹ் அல்லாத யாராலும் கற்பிக்க முடியாதுன்னு "நம்பனும்"...
வேறு யாரும் கற்பித்ததாக சொன்னாலும் அவர்களுக்கும் அல்லாஹ்வே அதை கற்பித்ததாக "நம்பனும்"... (12:36, 12:41, 16:67, 47:15, 83:25 மற்றும் மேலுள்ள நன்மை , தீமைக்கான எண்களையும் சேர்த்துக்கோங்க)

குர்ஆன்படி விபச்சாரம் தப்புன்னு "நம்பனும்"... (4:16, 25, 17:32, 60:12)
ஆனால் அடிமைப்பெண்களை புணருவது விபச்சாரமில்லைன்னு "நம்பனும்"... (4:3, 23:6, 33:50,52 , 70:30)

நேரடி ரத்தபந்த திருமணம் தவறுன்னு "நம்பனும்"... (4:23)
அதேநேரத்தில் ஆதாமுக்கு ஹவ்வா நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் " நம்பனும்"...
ஆதாமோட பிள்ளைகளுக்கு நடுவில் நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் "நம்பனும்".. (4:1)

கணவன் இறந்த பிறகு மனைவிக்கு மறுவிவாகம் என்பது பெண்ணுக்கு உடல் இச்சை மற்றும் சமூகரீதியான ஆதரவுன்னு "நம்பனும்"... (2:232)
ஆனால் இந்த ஆதரவு முகம்மதுவின் மனைவிகளுக்கு தேவைப்படாது என "நம்பனும்"... (33:53)

முகம்மது ஈமாந்தாரிகளுக்கு தந்தை இல்லைன்னு "நம்பனும்"... (முகம்மதுவின் பிள்ளைகள் உட்பட)... (33:40)
ஆனால் முகம்மதுவின் மனைவிகள் ஈமாந்தாரிகள் அனைவருக்கும் அன்னைன்னு "நம்பனும்"... (முகம்மதுவின் மாமனார்கள் உட்பட)... (33:6)

வளர்ப்பு மகனோட மனைவிமேல் இச்சை கொண்டு மணமுடிப்பது தவறில்லைன்னு "நம்பனும்"...(33:37)
ஆனால்... வளர்ப்பு மகனின் மனைவி, பால் ஊட்டிய வளர்ப்பு தாய் மக்கள்னு எந்த பந்தமும் இல்லாட்டியும், மற்ற ஈமாந்தாரிகள் முகம்மதுவின் மனைவிகளை தங்களுக்கு அன்னைன்னு "நம்பனும்"...(33:53)

 தாய், சகோதரி உறவல்லாத எந்த பெண்ணை வேண்டுமானாலும் முகம்மது மணமுடிக்கலாம் என "நம்பனும்"...(33:50)
திருமணம் அல்லாது, பிற பெண்கள் முகம்மதுவுடன் உடலுறவு கொள்ளவும் முடியும்னு "நம்பனும்"...(33:52)
ஆனால் அது விபச்சாரம் கிடையாதுன்னு "நம்பனும்"...(33:50)

இத்தனை "நம்பனும்"களுக்கு மேலே கட்டமைக்கப்பட்ட குர்ஆன்-ல எந்த முரண்பாடுமே இல்லைன்னு "நம்பனும்"... (4:82)

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...