மலக்கு, ஜின்களுக்கு எல்லாம் தெரியுமா? தெரியாதா?

அல்லாவும் உலகவியலும் -53.

ஜின்னுக்கும் (இப்லீசுக்கும்) வானவர்களும் (மலக்குகளுக்கும்) எல்லாம் தெரியுமா?..
அல்லது அல்லா சொல்லித்தந்தது மட்டுந்தான் தெரியுமா??..

34:14. .... ....  “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.

இந்த ஜின்களோட இனத்தை சேர்ந்த ஒருத்தன்தான் இப்லீஸ்...

18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; ... ...

18:51. வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

ஆச்சா... ஆக இப்லீசுக்கு மறைவான விசயம் எதுவுமே தெரியக்கூடாதுதானே...

7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

தன்னை அல்லா படைச்சது எதிலிருந்துன்னு இப்லீசுக்கு எப்படி தெரிஞ்சுச்சு???

ஆச்சா...

இதோட போனாலும் பரவாயில்லை...

2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.

அல்லா படைக்கிற போதே அல்லா யாரையும் கூட வச்சுக்கலை.. (18:51)

ஆனால் அல்லா படைக்கும் முன்பே அதுபற்றிய முன்முடிவுகளை வானவர்கள் வச்சிருந்து இருக்காய்ங்க...
A) அல்லா படைக்கப்போகும் பிரதிநிதியால் பூமியில் குழப்பம் வரும்.
B ) அந்த பிரதிநிதி இரத்தம் சிந்தும் உயிரினமாகதான் இருக்கும்.
C) அல்லா படைக்கும் அந்த பிரதிநிதி அல்லாவை மதிக்கமாட்டான்.
(//நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம். //அதனால அல்லா படைக்குற மனுசன் அப்படியிருக்கமாட்டான்னு வானவர்களுக்கு முன்பே தெரிஞ்சிருக்குது.😜😁)

அல்லா சங்கிமங்கியா.. அல்லது சொங்கிமங்கியா?.

7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.

அல்லா வெளியேற சொன்னாப்டி. அவனும் சரின்னுட்டான்... இதுவரை ஓகே.. ஆனா...

7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.

அல்லா படைச்சதே அப்போதுதான்.. ஆனால் அதுக்குள்ள...
இந்த ஜின் பயபுள்ள இப்லீசுக்கு மரணம், மறுமைநாள் பற்றிலாம் தெரிஞ்சிருக்குது பாருங்களேன்..😁😁


No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...