அல்லாவும் உலகவியலும் -42.
குர்ஆனும்... அது குர்ஆன் வசனங்களை விளக்கும் தன்மையும்...
குர்ஆன்ல வெட்கத்தலங்களை மறைச்சுக்க சொல்லிருக்காமே...
23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
23:4. ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
23:7. ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
23:8. இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
23:9. மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
23:10. இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
23:11. இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
இது ரொம்ப முக்கியமான வசனம்..
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;
தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;
மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
மேற்படி வசனங்களில்...
33:35 வசனத்துல வெட்கத்தலம் அப்படிங்கிறதுக்கு... கற்புன்னு பிரா(ஜா)க்கெட் போட்டிருக்கானுக... எப்படி பொருத்தம்னு தெரியலே...
😁😁
மொத்தத்துல....
வெட்கத்தலங்கள் எதுயெதுவென செல்லியிருக்கா....????
எந்தளவுக்கு மறைக்கனும்னு சொல்லியிருக்கா....???
ஏன்னா... குர்ஆன் ஒரு ஒரு தெளிவான, விளக்கமான, புரிஞ்சிக்க எளிதான புத்தகம்னு தன்னைத்தானே புல்லரிச்சுக்குது...
இப்போ பிரச்சனை என்னவெனில்...
நீங்க வெட்கத்தலம்னு குத்துமதிப்பா சொல்றீங்க...
ஆனால் ப்ளேபாய் முதல் கிங்பிஷர் வரை... ஹாலிவுட் முதல் சாண்டல்வுட் வரை... ஏகப்பட்ட பேரு... முன்னழகு, பின்னழகு.... முடியழகு, அடியழகுன்னு... பாகம் பிரிச்சு காட்டி... பக்காவா பணம் பண்ணிட்டு இருக்காங்கே...
இதுல...... 'டிக்கி' டான்ஸ் வழியில் முஸ்லிமாக்களும் பணம் பண்ணுவதாக தெரிகிறது...
யு ட்யூப்ல சும்மா... அரபிகளோட காமாந்தகார நடனம்னு தேடினா... பட்டியல் போட்டு வச்சிருக்காங்கே...
இதுக்கு அடுத்து... உடலமைப்பை காட்டும் பர்தா போடலாமா?...
லெக்கின்ஸ் போடலாமா?...
ஜீன்ஸ்-டிசர்ட் போடலாமா?...
துப்பாட்டா இல்லாத சுடிதார் போடலாமா??...
துப்பட்டா சேர்த்து உள்ள சுடிதார் போடலாமா?..
சேலை கட்டலாமா?...
பாவாடை-தாவணி அனுமதியா?..
முழு-பாவடை-- மேல் சட்டை (சட்டை.. ஜாக்கெட் அல்ல) அனுமதியா?.....ன்னு ஏகப்பட்ட சந்தேகம் பொத்துக்கிட்டு கொட்டுது...
பளிச்சுன்னு சொல்லுங்க பாயீக்களா...
ஒருபெண்.. தன்னோட பாலுறுப்புகள்... வெளிப்பார்வைக்கு நேரடியாக தெரியாதபடிக்கு மறைக்கனுமா?...
அல்லது....
அது பெண்ணாங்கிறதே தெரியாதபடிக்கு மறைக்கனுமா?...
அதாவது...
லெக்கின்ஸ் மாதிரி ஆடைகள் அனுமதியா?...
அல்லது...
போஸ்ட்மார்டம் பண்ணின பொணம் மாதிரி... உடலை மறைக்கனுமா?...
குர்ஆன் இதுபற்றி என்ன சொல்லுது... படங்களை பார்த்துட்டு பளிச்சுன்னு சொல்லுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment