அல்லாவும் உலகவியலும் -33.
அல்லாஹ் , குர்ஆன் , ஓரிறைக் கொள்கை ஆகியவை முகம்மதுவின் சுயநினைவற்ற நிலை கற்பனையா?
அல்லது
கட் - காப்பி- எடிட்- பேஸ்ட் வழியாக தனது சுய விருப்பங்களுக்கு சாதகமாக நுழைத்த முகம்மதுவின் சுயநல இட்டுக்கட்டலா??
அல்லாஹ் எனும் அரபுச் சொல்லின் பொருள் என்ன?
முகம்மது தன் கொள்கையை பரப்புரை செய்வதற்கு முன் அந்தப் பகுதி மக்களின் வழிபாட்டில் அல்லாஹ் இருந்திருப்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம்.
உதாரணமாக காபாவில் இருந்த ஹூபால் அல்லாஹ்தாலா என்றும் இதர லாத், மனத் உஸ்ஸா ஆகியவை அல்லாஹ் என்றும் வழிபடப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
யூதர்கள் வழிபட்ட யெஹோவாவும் அல்லாஹ் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
முகம்மதுவின் நபிந்துவத்திற்கு முன் இருந்த அல்லாஹ்வுக்கும், தற்போது வழங்கப்படும் அல்லாஹ்வுக்கும் இடையில் வித்தியாசம் உண்டா?
இந்தக் கேள்விகளுக்கான பதிலை முழுமையாக புரிந்து கொண்டால் தான் இஸ்லாமியர்கள் கூறும் அல்லாஹ்வை புரிந்து கொள்ள முடியும்.
குரானில் பிரபலமான ஒரு முத்திரை வாக்கியம் உண்டு, அது “அவர்கள் அறிந்து கொண்டே மாறு செய்கிறார்களா?” என்பது. இந்த வசனம் குரானில் பல இடங்களில் வேறுபட்ட சொற்களில் திரும்பத் திரும்ப வருகிறது. அன்றைய மக்காவாசிகள் அல்லாவின் புகழையும் வல்லமையையும், அவன் அளிக்கும் தண்டனைகளையும் மிக நன்றாக அறிந்து கொண்டே அல்லாவை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அது கூறும் பொருள்.
இது முகம்மது பரப்புரை செய்வதற்கு முன்பிருந்த அல்லாவுக்கும், முகம்மது கூறிய அல்லாவுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதான தொனியில் வருகிறது. இதை விரிவாக குரானின் 29வது அத்தியாயமான ‘சூரத்துல் அன்கபூத்’ என்பதில் காணலாம்.
மேலும், நீர் இவர்களிடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியிருப்பவன் யார் என்று கேட்டால் அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்?
குரான் 29:61
ஆனால் இது உண்மையா?
இந்த வசனத்தின் படி, முகம்மது செய்த பரப்புரையை ஏற்காதவர்களும் முகம்மது கூறிய அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்று குரான் கூறுவதாக பொருள்படும். தெளிவாகச் சொன்னால், ஒருவன் முஸ்லீம் என்பதற்கான அடையாளக் கடமைகளான தொழுவது, நோன்பு நோற்பது, காஅபாவை வலம் வருவது உள்ளிட்ட அனைத்தும் முகம்மதால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவை அல்ல.
ஏற்கனவே நடைமுறையில் இருந்தது தான்.
அவைகளை முகம்மது சற்றே சீர் திருத்தியிருக்கிறார், அவ்வளவே.
இன்று குரானின், ஹதீஸின் அதாவது முக்கமது பரப்புரை செய்த எந்தவித வணக்க நடைமுறைகளையும் பின்பற்றாமலேயே அல்லாவின் மீதான நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே கொண்டு முஸ்லீம்களாக அடையாளப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் அன்று இருந்தவர்களையும் முஸ்லீம்களாக கொள்ளலாம். அப்படிக் கொண்டால் தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் சரியாக இருக்கும். ஆனால் இதற்கு முரணாக தன் முதல் மனைவியான ஹதீஜாவைத்தான் முதல் முஸ்லீமாக அறிவிக்கிறார் முகம்மது. அப்படியானால் ஒன்று, மேற்கண்டது போன்ற குரான் வசனங்கள் தவறு என்றாகும், இரண்டு, முந்திய அல்லாவுக்கும் பிந்திய அல்லாவுக்கும் இடையே வித்தியாசம் உண்டு என்றாகும். இரண்டில் எது உண்மை?
அரபு மொழியில் அல்லாஹ் என்பதற்கு இறைவன் (அரபி இலக்கணப்படி ஆண்பால் சொல்லாகவே குறிக்கப்படுகிறது.)என்பது பொருள்.
தனிப்பட்ட எந்த ஒரு மதத்தையும் குறிக்காமல், பொதுவான அம்சத்தில் குறிச் சொற்கள் உலகின் பெரும்பாலான மொழிகளில் இருக்கின்றன. தமிழில் அதனை இறை எனும் பொதுச்சொல்லில் குறிக்கிறார்கள். இது உயர்திணை பால்வகையான இறைவன், இறைவிக்கு உள்ள பொதுச்சொல்லாக இறை என குறிக்கப்படுகிறது.
என்பது கட உள் அதாவது உள்நோக்கி கடத்தல் என்று பொருள் தரும் சொல்.
இறைவன் ஆண்டவன் என்பதெல்லாம் இது போன்ற நடைமுறை பொருள் கொண்டவையே. தெய்வம் , சாமி என்பவை நேரடி தமிழ் சொல்லில்லை.
அது போல அரபு மொழியில் உள்ள சொல் தான் அல்லாஹ் என்பது. இது தனிப்பட்ட முறையில் இஸ்லாமியர்களின் கடவுளைக் குறிக்காது. குரானில் பெயர் குறிப்பிடப்படும் தெய்வங்களான லாத், மனத், உஸ்ஸா உட்பட பலரை முகம்மதுக்கு முந்திய அரேபிய மக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் பொதுவான பெயர் அல்லாஹ். இஸ்லாமிய அல்லாஹ்வுக்கும் கூட 99 தனிப் பெயர்கள் இருக்கின்றன. இதைத்தான் மேற்கண்ட அந்த வசனங்கள் பொதுவான கடவுள் எனும் பொருளிலான அல்லா எனும் சொல்லை இஸ்லாமிய அல்லா என்று கருத்து திரிப்பு செய்கின்றன. அப்படியானால் பொதுவான அல்லாவுக்கும், இஸ்லாமிய அல்லாவுக்கும் இடையிலான வித்தியாசம் எப்படி உருவானது?
இங்கு தான் முகம்மதின் பாத்திரம் உயிரூட்டம் பெறுகிறது.
.. .. .. ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ஓதும் என்றார். அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள். நபி அவர்கள் இந்நிலையைப் பின்வருமாறு விளக்கினார்கள். அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதும் என்றார். நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன் .. .. .. (இவ்வாறு மூன்று முறை நடக்கிறது) மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு படைத்தவனாகிய உம்முடைய ரட்சகனின் திருப்பெயரால் ஓதும். அவனே மனிதனை அலக்கில் இருந்து படைத்தான். ஓதும் உம்முடைய ரட்சகன் கண்ணியம் மிக்கவன் என்றார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் குவைலிதின் மகள் கதீஜாவிடம் (முகம்மதின் முதல் மனைவி) நடந்த செய்தியை தெரிவித்துவிட்டு, தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள் .. .. .. புஹாரி 3
இது முதன் முதலில் தனக்கு வஹீ வந்ததாக தானே கூறிக் கொண்ட முகம்மது அது எப்படி இருந்தது என விவரிப்பதாக இருக்கும் ஹதீஸ். இந்த ஹதீஸை அறிவித்தவர் முகம்மதின் காதல் மனைவியான ஆய்ஷா. இது ஹீரா எனும் மலைக் குகையில் நடந்த நிகழ்ச்சி. அதற்கு முன் அந்த மலைக்குகையில் முகம்மது தனியே சென்று நாட்கணக்கில் தங்கியிருப்பது முகம்மதின் வழக்கமாக இருந்தது. இதையும் அதே ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.
.. .. .. ஹீரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் அங்கே தங்கியிருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். மீண்டும் கதீஜா அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள் .. .. ..
வரிய நிலையிலிருந்த ஒருவர், எந்த வணிக நிறுவனத்தில் வேலை செய்தாரோ அந்த நிறுவனத்தின் முதலாளியான கதீஜாவால் விரும்பப்பட்டு மணந்ததும், அந்தப் பகுதியின் மிகப் பெரும் செல்வந்தரான இளைஞர். பல நாட்களுக்கான உணவை தம்முடன் எடுத்துக் கொண்டு தனிமையில் அதுவும் இரவிலும் கூட ஒரு மலைக் குகையில் கழிக்க வேண்டிய அவசியம் என்ன? இது ஒரு முக்கியமான கேள்வி. இந்த ஹதீஸை உருவாக்கியவர்கள் இப்படியான ஒரு கேள்வியை எதிர் கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் அதே ஹதீஸில் ஒரு சமாளிப்பு பதிலையும் வைத்திருக்கிறார்கள்.
ஆய்ஷா கூறினார். நபி அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹீரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள் .. .. ..
ஆனால், ஹதீஸ் கூறும் இந்தத் தகவல் பொய்யானது. எவ்வாறென்றால், மெய்யாகவே முகம்மதுவுக்கு கனவுகளில் இறைச் செய்தி முதலில் வந்திருந்தது என்றால் குகையிலிருக்கும் போது வானவர் வந்து இறைச் செய்தியை கூறிய போது முகம்மது அச்சப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் அச்சப்பட்டிருக்கிறார். தனக்கு ஏதோ நேர்வதாக கருதி புலம்பியிருக்கிறார். மனைவியிடம் சென்று ஆலோசித்திருக்கிறார். கதீஜாவின் உறவினரான நவ்பல் என்பவர் தான் உனக்கு அல்லாவிடமிருந்து இறைச்செய்தி வந்திருக்கிறது என்று புரிய(!)வைக்கிறார். ஏற்கனவே கனவுகளில் கண்டு தெளிவடைந்திருக்கும் முகம்மதுக்கு பின்னர் இறைச் செய்தி வரும் போது ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? கனவில் இறைச் செய்தி வந்தது சரி என்றால் பின்னர் முகம்மது புலம்பியதும், நவ்பல் புரியவைத்ததும் தவறு என்றாகும். நவ்பல் புரிய வைத்தது சரி என்றால் முதலில் கனவில் இறைச் செய்தி வந்தது என்பது தவறாகும். இரண்டில் எது சரி என்று முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த ஹதீஸை உருவாக்கியவர்கள் முகம்மது இயல்பாகவே தனிமையில் இருந்து சிந்திக்கும் பழக்கமுடையவர் என்பதை ஏன் மறைக்க முயல வேண்டும்?
ஏனென்றால், முகம்மதின் சிந்தனையில் தான் அந்தப் பகுதி மக்களின் பொதுவான அல்லா இஸ்லாமியர்களின் அல்லாவாக உருமாறுகிறார். முகம்மது எழுதப் படிக்கத் தெரியாதவர், முகம்மது நேர்மையாளர் என அந்த மக்களால் புகழப்பட்டிருந்தார்.
ஹனிஃப் எனும் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தும் இயக்கம் முகம்மதுவுக்கு முன்பு மக்காவில் இருந்ததை மறைப்பது, முகம்மது இயல்பாக தனிமையில் சிந்திக்கும் பழக்கமுடையவர் என்பதை மறைப்பது என்பன போன்ற இஸ்லாமியர்களால் மறைக்கப்படுபவை எல்லாம் எதிர்மறையில் முகம்மதைப் பற்றிய பிம்பங்களை ஏற்படுத்துகின்றன.
இஸ்லாமிய ஓரிறைக்கொள்கை தோற்றம்:-
http://aadhirah.blogspot.com/2009/04/?m=1
http://noolaham.net/project/04/374/374.htm
https://answers.yahoo.com/question/index?qid=1006042309911
islamfrominside.com/Pages/Tafsir/Tafsir(10-105).html
https://en.wikipedia.org/wiki/Hanif
இதற்கு ஆதரவான வசனங்கள் குர்ஆனிலும் வருகிறது.
அதனால்.. எதனையும் மறுப்பதற்கில்லை.
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
16:123. (நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.
3:95. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
6:161. (நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
10:104. “மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:105. நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
10:106. உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
வியாபாரக் குழுக்களுக்கு தலைமையேற்று சிரியா போன்ற அண்டை நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்து சமூக நடப்புகளை கலாச்சாரங்களை அறிந்தவராக முகம்மது இருந்திருக்கிறார். தான் விரும்பும் விசயத்தில் நல்லவற்றுக்காக பொய் சொல்வதில் தவறில்லை என கருத்துக் கொண்டவராக இருந்திருக்கிறார். தனிமையில் இருந்து சிந்திக்கும் பழக்கம் உடையவராக இருந்திருக்கிறார். முகம்மதின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் ஓரிறைக் கொள்கையான ஹனிபிய் இயக்கத்தில் இருந்திருக்கின்றனர். இவைகளையெல்லாம் நேர்மையான முறையில் பரிசீலித்துப் பார்த்தால் பெறப்படும் முடிவு என்னவாக இருக்கும்?
முகம்மது வாழ்ந்த காலத்தில் அரேபியாவும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் மட்டுமே உலகம் அல்ல. இந்தியா, சீனா, மங்கோலியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகள்; ரஷ்யா போன்ற ஐரோபியப் பகுதிகள்; பெரு, பிரேசில், அர்ஜண்டைனா போன்ற மயன் இன்கா மக்கள் வாழ்ந்த லத்தின் அமெரிக்க பகுதிகள்; பழங்குடிகளின் ஆஸ்திரேலியா; செவ்விந்திய மக்களின் வட அமெரிக்கப் பகுதிகள் போன்றவைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் இவை இருந்ததாகவோ, அம்மக்களின் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்தோ உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது எனக் கூறப்படும் குரானிலோ ஹதீஸ்களிலோ எந்தக் கருத்தும் இடம் பெறவில்லையே ஏன்? மத்திய தரைக்கடல் பகுதி, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்நிலை கலாச்சாரம் குறித்து மட்டுமே குரானும் ஹதீஸ்களும் பேசுவது ஏன்? சிந்திக்கும் மக்கள் இதில் என்ன முடிவுக்கு வரமுடியும்?
முகம்மது எந்தெந்தப் பகுதிகளையும் மக்களையும் பற்றி அறிந்திருந்தாரோ அவைகள் மட்டுமே இஸ்லாமிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன.
முகம்மதுவுக்கு என்னென்ன அறிதல்கள் , தெளிவுகள் இருந்தனவோ அவைகள் மட்டுமே இஸ்லாமிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன.
முகம்மதின் வீட்டுக்குள் திடுமென யாரும் நுழைய வேண்டாம் என்று அற்ப பிரச்சனைகளுக்கெல்லாம் வஹீ எனும் இறைச் செய்தியின் மூலம் முகம்மதுவுக்கு தீர்வை வழங்கிய அல்லா, முகம்மதின் காதல் மனைவி ஆய்ஷா பிறருடன் தொடர்பு வைத்திருந்தார் எனும் அவதூறு செய்தியில் உண்மையா பொய்யா என அறியமுடியாமல் மாதக் கணக்கில் முகம்மது வாடிய அந்த முக்கியமான அந்த பொழுதில் இறைச் செய்தியை கொடுக்காமல் நிறுத்தி வைத்து ஏன்?
இந்த குரானைத் தவிர வேறெந்த அற்புதமும் முகம்மதுவுக்கு இல்லை என குரான் கூறும் போது...
17:93. “அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன்,
நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.
18:110. (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது;... ...
41:6. “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; ... ...
இந்நிலையில் இப்படியும் எதிர்தரப்பில் இருந்து விமர்சனம் வருகிறது.
26:154. “நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
26:186. “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
36:15. (அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
சமாளிக்க இயலாத நிலையில்...
54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
நிலவைப் பிளந்தது , மிராஜ் பயணம் உள்ளிட்ட பல அற்புதங்களை செய்தது எப்படி?
வஹி வருவது தவிர சராசரி மனிதனான முகம்மதுவுக்கு ஒப்ப நிலவு பிளந்தது எப்படி?..
எந்த அல்லாஹ் இதில் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறாரோ அந்த குரானில் முரண்பாடுகள் இருக்கின்றன.
எந்த அல்லாஹ் இதில் பிழைகள் இல்லை என்று கூறுகிறாரோ அந்த குரானில் பிழைகள் இருக்கின்றன. என்றால் முகம்மதின் அல்லாஹ் யார்?
சந்தேகமின்றி முகம்மதுவும் , முகம்மதின் அல்லாஹ்வும் ஒருவரே.
அதாவது முகம்மது தன்னுடைய நோக்கத்தை அல்லது தான் வாழ்ந்த காலத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கற்பனையில் தனக்குத் தானே உருவகித்துக் கொண்டது தான் இஸ்லாமிய அல்லாஹ்.
சிந்திக்கமாட்டீர்களா , சிந்திக்க மாட்டீர்களா? ..
எனும் குர்ஆன் கேள்வியை பின்பற்றி சிந்திக்கும் அனைவருக்கும் இது தெளிவாக விளங்கும்.
16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.
..மஜா அல்வா..
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment