அல்லாஹ் படைச்ச பூமி நாம் வசிக்கும் பூமி தானா??

அல்லாவும் உலகவியலும் -46.

அல்லா பூமியை படைச்ச வித்தை..

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

்...........்

41:9 ல அல்லா பூமியை ரெண்டு நாள்ல படைச்சதாக உள்ளதே...

பூமிக்கு ஒரு நாள் என்பது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுத்திக்க ஆகும் நேரம்...

அல்லா பூமியை படைச்சது எப்படி?..
எதனைக்கொண்டு கணக்கு வச்சாப்டி?..
அல்லா பூமின்னு ஒரு பொருளை முடிவு பண்ணுனதுல இருந்துன்னு கணக்கு வச்சாலும்... பூமி அல்லா படைக்க ஆரம்பிச்சபோதே சுற்ற ஆரம்பிச்சிடுச்சா?...

41:10ல அல்லா பூமில மலையை வச்சதாக சொல்றாப்டி... அப்படின்னா... அல்லா பூமியை தனியா படைச்சு.. அதன்மேல் மலைகளை தனியா வச்சாப்டியா?...

இந்த வகைல அல்லா முதல்ல பூமியை படைச்ச ரெண்டு நாள்ங்கிறது.. பூமில உள்ள மலைகளுக்கு பொருந்தாதா?..

41:11ல வானம் புகையா இருந்திச்சு. நான் கூப்பிட்டேன் வந்திச்சுன்னு சொல்றாப்டி... அப்படின்னா.. அல்லா கூப்பிடும்வரை வானம், பூமிலாம் எங்க இருந்திச்சு?.. இதனை படைக்க அல்லா லேப் / வொர்க்‌ஷாப்னு தனியா கம்பெனிலாம் வச்சிருந்தாப்டியா?..

41:12ல  மொரட்டு காமடி பண்ணிருக்காப்டி... ஏழுவானங்கிறது.. காற்று மண்டலத்தைதான்னு முல்லாக்கள் முட்டுக்கொடுக்கிறானுக...
சரின்னு... அடுத்தவரிக்கு போவம்...
உலகத்துக்கு சமீபமான வானத்துக்கு.. சீரியல் லைட் போட்டாராம்ல...

இந்த சீரியல் லைட்கள்... நட்சத்திரமா?.. நிலா, சூரியனா... (சூரியனையும்  நட்சித்திரம்னுதான் அறிவியல் சொல்லுது.)

மொத்தத்தில் மேலே தெரியற நட்சத்திரங்கள் மற்றும் நிலாதான்னு வச்சுக்குவோம்...

சரின்னு இதை ஒப்புக்கிட்டா... அல்லா படைச்ச ஏழுவானம் எது?..

ஏன்னா... நட்சத்திரம்லாம் இந்த காற்றுமண்டல தூரத்துக்குலாம் வெகு அப்பால் இருக்குன்னு அறிவியல் சொல்லுது...

ஆச்சா... வாங்க இதே வேகத்துலயே... அல்லா பூமியை படைச்ச அறிவியல் வித்தையையும் பார்த்துடுவோம்..

வாங்க... மறுபடி மேலே போவம்...

41:9ல அல்லா பூமியை 2நாள் டைம் எடுத்து படைச்சிட்டதா சொல்றாப்டி..

41:10ல மேலும் சிலநாள் டைம் எடுத்து.. ஏற்கனவே படைக்கப்பட்ட பூமியில் மலைகளையும், இன்ன பிறவற்றையும் உருவாக்கினதாக சொல்றாப்டி...

பார்த்தீங்களா அல்லாவோட ஆற்றலை...

பூமியையும், மலைகளையும் அல்லா வெவ்வேறு காலத்துல படைச்சிருக்காப்டி...

அல்லாவோட படைப்பாற்றல் கண்டு வியந்துக்கோங்க...

மாஷா அல்லாஹ்...

வாங்க மேலும் போவம்... ஏன்னா.. முல்லாக்கள் சிலர் 41:10ல அல்லா மலைகளை உருவாக்கினது.. ஏற்கனவே இருந்த பூமியில் இருந்து மண்ணெடுத்துதான்னு... முட்டுக்கொடுக்குறாக.. நாம அதை ஆராய்வோம்..

அல்லா பூமியை விரிச்சு.. அதுக்கு மேலே மலைகளை நட்டுவச்சதாக ஒப்புக்குறாப்டி..

13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்;

15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்;

50:7. மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்;

அது மட்டுமா?...

பூமி மனிதர்களோடு இருந்தால் அசையும்னு... அப்படி ஆகாமல் இருக்க அல்லா மலைகளை ஒட்டியிருக்காப்டி...

16:15. உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்;

78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா
79:32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
88:19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

அதாவது பேப்பரை விரிச்சு வச்சிட்டு... பேப்பர் காத்துல பறக்காமல் இருக்க பேப்பர் வெய்ட்டை அது மேல வைப்பது போல...

வாங்க ....
இன்னொரு மாஷா அல்லாஹ் சொல்லிட்டு... இன்னும் கொஞ்சம் போவம்...

அல்லாவைப் பொறுத்தவரைக்கும் மலைங்கிறது தனி... பூமிங்கிறது தனி...

69:14. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -

அல்லாவோட காமடிகளுக்கு  இந்த அத்தியாய வசனங்கள் முத்தாய்ப்பு..

78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10. அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
78:17. நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:18. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
78:19. இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

கவனிக்க:- இப்போ பூமியில் இருந்து வானத்துல போறதுக்கு ஒரேயொரு வாசல் மட்டுந்தான் இருக்குதாம்...

ஆனால்... இந்த பாழாப்போன விஞ்ஞானிகள்... பூமியோட பல திசைல இருந்தும்... ராக்கெட் விடுறாய்ங்க...

79:27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
79:28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
79:29. அவன்தான் இரவை இருளடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.
79:30. இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.
79:31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
79:32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
79:33. உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

88:17. (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18. மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)



No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...