அல்லாவும் உலகவியலும் -52.
அல்லா எதுக்காக மனிதனை படைச்சாப்டி?
51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
ஆச்சா..
அல்லா மனிதனை, ஜின்களை படைச்ச நோக்கம் தெளிவாகிடுச்சு..
சரி.. இப்போ மனிதன் , ஜின் எல்லாம் அப்படித்தான் இருக்கா...
இல்லவேயில்லை..
ஏன்?.. என்னாச்சு?..
11:119. (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்;
... ... (மானே , தேனேக்கு புள்ளி குத்தி கடப்போம்)..
தன்னை வணங்குறதுக்காகவே மனிதனையும், ஜின்னையும் படைச்ச அல்லா.. ஏன் நரகத்துல போடனும்??.
32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
சரி.. அல்லா வாக்கு கொடுத்திட்டதால தன் வாக்கை அல்லா மாத்திக்க முடியாது..
அதென்ன நேர்வழி.. ??? நாம் நாடியிருந்தால்னு சொல்றாப்டி... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்???
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
ஆக நேர்வழியை நாம தேடிக்க முடியாது.. அல்லாதான் நேர்வழியை காட்டனும்..
சரி... காட்டட்டும்...
14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
10:49. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை;
(இதுபற்றி இன்னும் நிறைய வசனம் இருக்குன்னாலும்.. பதிவு நீ..ள..மா ஆகிடக்கூடாதுன்னு முடிச்சுக்குவோம்..)
ஆக.. நேர்வழி..... வழிகேடு எல்லாமே அல்லாவோட நாட்டம்தான்... மனிதனால் அல்லாவோட நாட்டம் இல்லாமல் தனக்குத்தானே நன்மை, தீமையைக்கூட செய்துக்க முடியாது.
ஆச்சா..
சரி.. அல்லாவுக்கு எதுக்கு இந்த வேலை..???
28:68. மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்;
13:39. தான் நாடியதை அல்லாஹ் அழித்து விடுவான். நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
87:7. அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
ஆக எல்லாம் தெரிஞ்சது அல்லா மட்டுந்தான்..
அதென்ன குறுக்கால (13:39) உம்முல் கிதாப்னு எதையோ அல்லா சொல்றாப்டி??
6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
நாசமாப்போச்சு...
தான் நாடினதை தன்விருப்பத்துக்கு பண்ணுற அல்லா.. தன்னிடமுள்ள மூல ஏட்டுல பூமியில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் , மரத்துல இருந்து இலை உதிர்வதையும்கூட முன்பே திட்டமிட்டு , தான் எப்போ எது எதை எப்படி நாடுவேன்ங்கிறவரைக்கும் அந்த மூல ஏட்டுல அல்லா பதிவு பண்ணிவச்சிருக்காப்டி..
98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
கடைசிக்கு நான் நரகத்துல போடுவேன்னும் எழுதிவச்சிட்டுதான் படைச்சாப்டியா??? பின்ன என்னத்துக்கு தன் திட்டப்படி நடந்ததுக்கு எதுக்கு.. படைப்பினத்தை திட்டிக்கிட்டு திரியுறாப்டி..
ஒருவேளை இதுவும் அல்லா தன் நாட்டப்படி செய்வதாக இருக்குமோ!!!!😁
(நான் இந்த பதிவு எழுதுவதுகூட ஏற்கனவே அல்லா எழுதிவச்ச மூல ஏட்டில் உள்ளபடிக்குதான்..😜 .. அதனால் முமீனுகள் விசனப்பட வேண்டாம்..)
..
Subscribe to:
Post Comments (Atom)
முஹம்மது <= பவிஷ்ய புராணம்
As per Bhavishya Purana (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate mleccha [foreigner] teacher will appear, Mah...

-
அல்லாவும் உலகவியலும் -26. அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு.. அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று...
-
அல்லாவும் உலகவியலும் -38. யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா நகரில் முகம்மதுவுக்கு...
-
அல்லாவும் உலகவியலும் -45. நபி வழி மந்திரித்தல் மூலம் மருத்துவம்.. யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால்...
No comments:
Post a Comment